விஜய் தாெலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் அடுத்தடுத்த டுவிஸ்டுடன் ஔிபரப்பாகி கொண்டிருக்கின்றது. ரசிகர்களும் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடனே இருக்கின்றார்கள். அந்தவகையில் ஈரமான ரோஜாவோ சீரியலில் சக்தி லவ் பண்ணிய அர்ஜுனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்து விட்டது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சக்தி அர்ஜுனை மீட் பண்ணிப் பேசுகின்றார், அங்கு வந்த அர்ஜுனின் தாய் "மண்டபத்தில் பொய் சொல்லி இவனைக் கட்டிக்கப்பார்த்தவ தானே நீ, அங்க அவனை மடக்க முடியல, இப்போ இங்க இவனைத் தனியாக கூப்பிட்டு இழுத்திட்டு ஓடலாமான்னு பார்க்கிறியா" எனக் கூறி சக்தியைத் திட்டுகின்றார்.
பின்னர் வீட்டிற்குச் சென்ற அர்ஜுனின் தாய் "என்ன குடும்பம் இதெல்லாம், இப்படியா கீழ்த்தரமாக நடந்துக்குவாங்க" எனக் கூறி சக்தி குடும்பத்தை கேவலமாக பேசுகின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த ப்ரியா "யாரைப் பற்றி என்ன பேசுறீங்க, என் குடும்பத்தைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு" எனக் கேட்டுக் கத்துகின்றார்.
அதற்கு அர்ஜுனின் தாய் "வாக்கப்பட்ட வீடுன்னு கூடப் பார்க்காமல் இப்பிடியா பேசுவ" எனக் கேட்கின்றார். இதனையடுத்து ப்ரியா ஜீவாவிடம் "இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் உங்ககிட்ட பேசவோ, பழகவோ, வாழவோ என்னால முடியாது, அவ்வளவு தான், இதுக்கு அப்புறம் எங்கள பார்க்க வந்தீங்க அசிங்கப்பட்டு போய்டுவீங்க" எனக் கூறுகின்றார்.
அதற்கு காவியா ஜீவாவிடம் "உங்க அண்ணனுக்கும் இதையே சொல்லி வையுங்க" எனக் கூறி ப்ரியாவுடன் வீட்டை விட்டு வெளியேறுகின்றார்.
Listen News!