தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘டிஷ்யூம்’ திரைப்படத்தில் அமிதாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் மலையாள நடிகர் பக்ரு. குள்ள நடிகர்களை தமிழ் சினிமா கொஞ்சம் மறந்திருந்த நிலையில் அவர்களை மீண்டும் நினைவுபடுத்தியவர் நடிகர் பக்ரு தான். மேலும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞ்சராக ரசிகர் மத்தியில் அறிமுகமானார்.
அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன், 7 ஆம் அறிவு போன்ற பல படங்களில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநரகாவும், தயாரிப்பாளராகவும் பல பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இவரது உண்மையான பெயர் அஜய் குமார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் இந்த நிலையில் கோட்டயத்தில், ஹரிகுமார் என்ற சிற்பி வடிவமைத்திருந்த நடிகர் பக்ருவின் மெழுகு சிலை திறப்பு விழா இடம்பெற்றது.
இதில் கலந்துக்கொண்ட நடிகர் பக்ரு, மெழுகு சிலையை கண்டு வியந்து பாராட்டினார். அத்தோடு உயரத்திலும், தோற்றத்திலும் தன்னை போன்றே இருப்பதை கண்டு மெய்சிலிர்த்து நின்றார். சிற்பி ஹரிகுமார் ஏற்கனவே நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோரின் மெழுகு சிலையை வடிவமைத்திருந்தார்.
திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்து 2 வாரத்திலேயே திடீரென இறந்துவிட்டது. அதன் பின்னர் இவருக்கு 2009 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் தீப்தா கீர்த்தி.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பக்ரு தனது மகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். சினிமாவில் என்னால் சிறப்பா வரமுடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றோருக்குக் கொடுக்கும்விதமா எனக்கு சில வாய்ப்புகள் அமைஞ்சது.
அத்தோடு அந்த சூழல்ல காயத்ரி என் வாழ்க்கைத் துணையாக வந்தது, என் வாழ்வின் அழகான அத்தியாயம்.எனக்கு நம்பிக்கை கொடுத்தது என் மனைவி தான் .இதன் பின்னர் 2009-ல் எங்க பொண்ணு தீப்த கீர்த்தி பிறந்தா. ஏழு வயசு வரை என்னை அண்ணன்னுதான் நினைச்சுகிட்டிருந்தா!’’ எனும்போது, பக்ரூ கண்களில் சிறிய புன்னகை தென்பட்டது. “என் பொண்ணுதான் என் உலகம். பாடம் சொல்லிக்கொடுக்கிறது, விளையாடுறது, கதை சொல்றது, காமெடி பண்றது, சமையல் பண்றதுன்னு நாங்க இணை பிரியாத ஃப்ரெண்ட்ஸ்.
ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்பல்லாம் என்னால சைக்கிள், பைக் ஓட்ட முடியலையேங்கிற கவலையை எனக்கு டிரைவரா இருந்து என் ஃப்ரெண்ட்ஸ்தான் நிவர்த்தி செய்வாங்க.அத்தோடு இப்போ 5வது படிக்கிற என் பொண்ணுதான், என் சைக்கிள் டிரைவர். எனக்கு வந்த குறை அவளுக்கு இல்லை என்பதில் நான் ஆண்டவனுக்கு நன்றி தெரிவிச்சிக்கிறேன் என்று மனம் உருகி பக்ரூ. இப்படி ஒரு நிலையில் பக்ருவின் மகளின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
Listen News!