• Nov 10 2024

என்னது 300 கோடியா.. உலக மகா உருட்டுடா சாமி.. வாரிசு படத்தை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த வாரிசு திரைப்படமானது உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, தளபதி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை ஆரவாரத்தோடு கொண்டாடி வருகிறார்கள்.


அந்தவகையில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்திருந்த திரைப்படம் தான் 'வாரிசு'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது பொங்கல் விருந்தாக ஜனவரி 11 ஆம் தேதி அஜித்தின் 'துணிவு' படத்திற்குப் போட்டியாக வெளியாகி இருந்தது.


மேலும் இந்தப்படம் வெளியாக முதலே, ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும்.. மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்தாலும் வாரிசு திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து இன்றும் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அத்தோடு இப்படமானது தமிழ்நாட்டில் மட்டும் 140 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் 250 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவையெல்லாம் சேர்த்தே உலகம் முழுவதும் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


இந்நிலையில், வாரிசு பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்டை ப்ளு சட்டை மாறன் தாறுமாறாக ட்ரோல் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது இப்பதிவில் "300 கோடி. உலக மகா உருட்டு" என பதிவிட்டுள்ளார். ப்ளு சட்டை மாறனின் இந்தப் பதிவை  பார்த்த அஜித் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


வாரிசு படத்துக்கு ரசிகர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்திருந்தாலும், 300 கோடி வசூல் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதையே ப்ளு சட்டை மாறன் உலக மகா உருட்டு என ஓப்பனாக ட்ரோல் செய்துள்ளார்.


அவர் சொல்வதே உண்மை என்பதுபோல நெட்டிசன்களும் 300 கோடி வசூல் எல்லாம் உலக மகா உருட்டு என்று தமது பாணியில் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement