வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற பல பெஸ்ட் என சொல்லப்படும் திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் தான் இயக்குநர் வசந்தபாலன்.
இந்நிலையில் இந்த ஆண்டு அவருடைய இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் அநீதி. திரைப்படத்தில் அர்ஜுன்தாஸ் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார் மேலும் வனிதா விஜயகுமார், பரணி, காலி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு பல பாராட்டுகள் கிடைத்தது.
கடந்த ஜூலை 21ம் தேதி உலக அளவில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் வசந்த பாலனுடன் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் இதனால் இவர் இணைவார் என சொல்லப்படுகிறது..
மேலும் அவர் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் அவைகளில் வில்லன் கதாபாத்திரம் அல்லாமல் ஒரு பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அவர் சொல்லியுள்ளார்.
எனவே அர்ஜுன் தாஸ் தமிழில் கதாநாயகனாக கலக்க போகிறார் என பேசப்பட்டு வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!