• Sep 21 2024

என்னது...25 கோடி கடன் வாங்கினேனா...? கடுப்பாகி சமந்தா கொடுத்த பதிலடி...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நோயால் சமந்தா படுத்த படுக்கையாக இருந்ததாகவும், உடலை அசைக்க கூட முடியாத அளவுக்கு வலி இருக்கும் என்றும் அவரே பேட்டியில் தெரிவித்து இருந்தார்.



சமந்தா சிகிச்சை பெற்றுக்கொண்டே ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டார். தற்போது சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்க்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

முதலில் ஆன்மீக பயணம் அதன்பின் தோழிகள் உடன் வெளிநாட்டு பயணம் என நேரத்தை அவர் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சமந்தா அவரது சிகிச்சை செலவுக்காக ஒரு பிரபல ஹீரோவிடம் 25 கோடி ருபாய் கடன் வாங்கினார் என நேற்று செய்தி பரவியது.

இந்நிலையில் தற்போது சமந்தா இந்த செய்தி பற்றி கடுப்பாகி கோபமாக இன்ஸ்டாகிராமில் பேசி இருக்கிறார்.

"மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்கு 25 கோடியா. உங்களை யாரோ ஏமாற்றி இருக்கிறார்கள். நான் அதில் ஒரு சின்ன தொகையை தான் செலவு செய்கிறேன்."

'நான் இத்தனை காலம் என்ன சம்பாதித்தேன் என நினைக்கிறீர்கள். என்னை எனக்கு பார்த்து கொள்ள தெரியும்.' இந்த நோய் பல ஆயிரம் பேருக்கு வருகிறது. சிகிச்சை பற்றி தவறான செய்தி பரப்பாதீங்க' என சமந்தா கூறி இருக்கிறார்.  



Advertisement

Advertisement