• Sep 20 2024

விமலின் 'குலசாமி' படம்.. இன்று வெளியாகாமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன.. சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விமல் நடிப்பில் தற்போது 'தெய்வ மச்சான்', 'குலசாமி' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இந்த 2படங்களுமே இன்று வெளியாக இருந்த நிலையில், தெய்வ மச்சான் படம் மட்டுமே வெளியாகி இருக்கின்றது. ஆனால் குலசாமி படம் வெளியாகவில்லை.

அந்தவகையில் 'குலசாமி' படத்தை சரவண சக்தி  இயக்கியுள்ளார். அத்தோடு இதில் விமலுக்கு ஹீரோயினாக  தான்யா ஹோப் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது போஸ் வெங்கட், வினோதினி, மகாநதி ஷங்கர்,கர்ணராஜா, முத்துப்பாண்டி, ஜெயசூர்யாஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 


மேலும் குலசாமி படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகர் மகாலிங்கம் இசையமைப்பாளராகவும், மக்களிடம் பிரபலமான ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் நடிகராகவும் அறிமுகமாகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு படத்தின் வசனங்களை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில் எம்.ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரித்துள்ள இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக இப்படத்திற்கு முன்பதிவும் சில தியேட்டர்களில் தொடங்கிய நிலையில், படம் இன்றைய தினம் ரிலீசாகவில்லை.


இதுகுறித்து தற்போது படக்குழு சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் "குலசாமி படத்தை தியேட்டரில் வெளியிட உகந்த சூழல் இல்லாத காரணத்தால் படமானது மே 5 ஆம் தேதி ரிலீசாகும்" என குறிப்பிட்டுள்ளனர்.  இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விமல் ரசிகர்கள் பலரும் சோகமடைந்தனர். 

மேலும் ஒருசிலர் தெய்வ மச்சான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தமையினால் தான் குலசாமி படத்தை தள்ளி வைத்ததாகவும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement