பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்க கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், மணிச்சந்திரா, ஜோவிகா, வினுஷா, ஐஷு, பவா செல்லதுரை என மொத்தம் 18 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த முறை இளம் போட்டியாளர்கள் அதிகமாக பங்குபற்றி இருப்பதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன சில சீசன்களாக திருநங்கை போட்டியாளர்களையும், சாமானியர்களையும் அறிமுகப்படுத்தி வந்து கமல்ஹாசன் அரசியல் பேசி வந்த நிலையில், இந்த சீசனில் அதெல்லாம் எங்க பாஸ் காணோம் என்று கேட்டு வருகின்றனர்.
மேலும் பிக் பாஸ் சீசன் 5ல் நமீதா மாரிமுத்து பங்கேற்ற போது ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். ஆனால், ஒரே வாரத்தில் அவர் வெளியேறியது அதிர்ச்சியைக் கொடுத்தது. அதே போல கடந்த சீசனில் ஷிவினை பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். மக்கள் தேர்வு செய்த போட்டியாளராகவும் திருநங்கை போட்டியாளராகவும் பங்கேற்ற ஷிவின் கணேசன் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் தனது தனித்திறமையை காட்டி கலக்கி இருந்தார்.
ஆனால், இந்த சீசனில் அது இல்லையே? ஏன்? என்கிற கேள்வியை பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.நெப்போடிசம், சிபாரிசு என இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஊழல் படிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியாக உள்ளது என்றும் சாமானியர்களில் ஒருவரை கூட பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பவில்லையே இதெல்லாம் நியாயம் தானா பிக் பாஸ்? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!