வருகிற 11ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ள திரைப்படம் தான் துணிவு. எச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பது ஏற்படுத்தியுள்ளதோடு கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார்.
அத்தோடு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தை சென்சாரில் பார்த்த நபர் ஒருவர் தன்னுடைய விமர்சனத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அஜித் குமார் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. தனக்கென்று உள்ள தனி பாணியில் நடித்து ஹீரோவாகிய வில்லனாக படம் பார்வர்களை கவருகிறார். படத்தில் இடம்பெற்ற ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம்.
நடிகை மஞ்சு வாரியர் கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸ் தான். தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்க்கிறார். நேர்த்தியான காட்சிகள், அஜித்தின் ஸ்டைலிஷ் ஸ்வாக் மற்றும் கைதட்டல்களை அள்ளும் வசனங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், துணிவு சிறந்த படமாக இருக்கும்.
ஹாலிவுட் லெவலில் துணிவு படத்தை எடுத்துள்ளார் எச். வினோத். அதற்கு தனி பாராட்டு. தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத படமாக துணிவு இருக்கும். இளைஞர்களை கண்டிப்பாக இப்படம் கவரும் என பதிவு செய்து 3.5/ 5 ரேட்டிங் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!