• Nov 17 2024

அமலா பால் நிர்வாண காட்சியில் நடிக்கும் போது..9 பேர் மட்டுமே இருந்தோம்.. மனம் திறந்த ஆடை திரைப்பட பிரபலம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஆடை, டாக்டர், ஜெயிலர் படத்தில் ஒளிப்பதிவாளரான விஜய் கார்த்திக் கண்ணன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில், ஆடை படத்தில் நிர்வாணகாட்சியை படமாக்கியது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் அந்த பெண் நிர்வாணமாக இருக்கிறார் என்று தெரியவேண்டும். அதற்காக ஆபாசமாகவும் வந்துவிடக்கூடாது என்று மிகவும் மெனக்கெட்டோம்.

இதற்காக பல ஆங்கில படத்தை ரெபரன்சிற்காக பார்த்தோம் ஆனால், அது திருப்தியை தரவில்லை. இதனால், முதலில் போட்டோஷூட் செய்து பிளான் போட்டாம். பொருளை வைத்து உடலை மறைப்பது, அவுட் ஆஃப் போகஸில் காட்டுவது, ஓடுவது என இந்த காட்சியைத் காட்ட முடியும். இதையே காட்சிகளை எப்படி போர் அடிக்காமல் எப்படி கொடுப்பது என்று முடிவு செய்து, கண்,கை கால் என தனித்தனியாக கிளாசப்ஸ் ஷாட் எடுத்தோம்.


ஒரு காட்சியில் அமலா பால், உடையே இல்லாமல் அமர்ந்து இருப்பார். ஆனால், அந்த காட்சியில் கொஞ்சம் கூட ஆபாசமே தெரியாது. அந்த காட்சியை திட்டத்தட்ட 16 பணிநேரம் எடுத்தோம், படப்பிடிப்பு நடக்கும் போது, நான், இயக்குநர், டாலி ஆபரெட்டர், ஸ்டெடி கேம் ஆபரேட்டர், என்னுடைய உதவியாளர் என மொத்தமாக 9 பேர் தான் இருந்தோம். 


அமலா பால், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நிர்வாணமாக நடிக்க அமலா ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அந்த படமே செய்திருக்க முடியாது என்று ஒளிப்பதிவாளர் இந்த தகவலை அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Advertisement

Advertisement