• Nov 14 2024

திருமணம் பற்றி கேட்டதற்கு உடனே பதிலளித்த ஹன்சிகா-இந்த பதிலை யாருமே எதிர்பார்க்கலையே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனது திருமணம் குறித்த கேள்விக்கு சுவீட்டாக பதிலளித்துள்ளார் நடிகை ஹன்சிகா.

திரையுலகில்  முக்கிய நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. தன்னுடைய க்யூட் சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.சமீபத்தில் இவரது 50வது படமாக மஹா படம் வெளியானது. இந்தப் படத்தில் இவருடன் சிம்பு நடித்திருந்தார்.



இதனைத் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஸ்கிரிப்ட்களில் ஹன்சிகா தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.நடிகை ஹன்சிகா கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும் சில பாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கோலிவுட்டில் சின்ன குஷ்பூ என்ற பாராட்டுக்கு உரியவர். 


மேலும் இவரது பல படங்கள் இவரது க்யூட் சிரிப்பு மற்றும் நடிப்பால் சிறப்பாக அமைந்தன.தமிழில் தனுஷுடன் மாப்பிள்ளை என்ற படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்த ஹன்சிகா, நிற்கக்கூட நேரமில்லாமல் தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 


இந்நிலையில் தற்போது ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது ஒருவர் Will you marry me? என கேட்க, அதற்கு நோ என பதிலளித்த ஹன்சிகா தனது குழந்தை பருவ போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்.


நான் இன்னும் குழந்தை தான் என்பதை அவர் இப்படி சொல்லி இருக்கிறார். நீங்களே பாருங்க.. 





Advertisement

Advertisement