• Nov 14 2024

ஸ்ரீநிதி எதுவுமே நடக்காத மாதிரி கேரளாதாலி போட்டிருக்கிறியா என்று கேட்டா- சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நட்சத்திரா!

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்ரீநிதி என்னை வந்து பார்த்தாள் என்னுடைய தாலியை பார்த்து கேரளா தாலி போட்டிருக்கிறியா என்று கேட்டதாக நக்ஷ்சத்திரா தெரிவித்துள்ளார்.

ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் நக்ஷ்சத்திரா. இவர் அண்மையில் சிம்பிளான முறையில் தனது காதலனை கரம் பிடித்தார். திருமணம் முடிந்ததை அடுத்து நேற்றைய தினம் பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாடி இருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது பிரபல சேனல் ஒன்றிற்கு தனது கணவருடன் சேர்ந்து பேட்டியளித்திருந்தார். அதில் ஸ்ரீநிதி குறித்தும், திருமணம் பற்றியும் நட்சத்திரா பேசியுள்ளார்.அதாவது தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் தான் அவசர அவசரமாக எங்கள் திருமணம் நடந்தது. 


ஸ்ரீநிதி வீடியோவில் சொன்னது எல்லாமே பொய். ஏதோ மன உளைச்சலில் இருந்தார், என் மீது அவருக்கு நிறைய அன்பு அதனால் தான் டிப்ரஷனில் அப்படி பேசிவிட்டார். திருமணத்திற்கு பிறகு என்னை வந்து பார்த்தார். எதுவுமே நடக்காத மாதிரி என் தாலியை வந்து பார்த்து கேரளா தாலி போட்டு இருக்கிறியா? என கேட்டார். இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீநிதி கூட மட்டுமில்லை சைத்ரா, ஷபானா, ரேஷ்மா எல்லோரும் இப்பவும் என பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் தான்” என்று நட்சத்திரா தெரிவித்துள்ளார்.


அத்தோடு இன்னும் பல சுவாரஸியமான விடங்களைக் கூறியிருந்தார் மேலும் இவரது தோழியான ஸ்ரீ நிதி  “ நட்சத்திரா திருமணம் செய்யவுள்ள நபர் நல்லவர் இல்லை, நியாயம் கேட்க போன என்னை அவர்கள் அடிக்க வருகிறார்கள். நட்சத்திராவை அடைத்து வைத்துள்ளார்கள்” என பல விஷயங்களை கூறி பகீர் கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement