தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தான் நடிகை சிந்து.இவர் நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் அங்காடித் தெரு தானாம்.
இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல சிகிச்சைகளை மேற்கொண்டதோடு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.
அதில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்தேன். பணம் இல்லாததால் என் சொந்தங்களே என்னைவிட்டுபோய் விட்டார்கள். தன்னிடம் 20 ஆயிரம் ரூபாய் இருந்தாலும் அதில் 15 ஆயிரம் ரூபாயை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி இருக்கிறார்.
14 வயதில் எனக்கு திருமணம் நடந்து 15வயதில் ஒரு பெண்குழந்தையுடன் கணவரைவிட்டு பிரிந்து அப்பா வீட்டில் இருந்தேன். அப்போது முதல் இப்போது வரை கஷ்டத்தை மட்டுமே, நான் அனுபவித்து இருக்கிறேன். இருந்தாலும், கஷ்டப்பட்டு இரவு பகலாக நடிச்சு அந்த காசில் என்னை போன்று கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். ஆனால், எனக்கு ஏன் கடவுள் இந்த புற்றுநோயை கொடுத்தார் என்று தெரியவில்லை.
மருத்துவமனையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டேன், யாராவது உதவி செய்யமாட்டார்களா என எதிர்பார்த்து காத்திருந்தேன். அந்த நேரத்தில் ஷகிலா அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எனக்கு அக்கா என்பதைவிட அவர்களை என் அம்மா என்று தான் சொல்லுவேன். அவர்கள் என்னை பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்ட பிறகு பலர் என் வீடு தேடிவந்து உதவி செய்தார்கள்.
இப்போதும் சிகிச்சையில் தான் இருக்கிறேன் நான் இன்னும் முழுவதுமாக குணமாகவில்லை, மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு மேலும், நான் ஓய்வில் இருக்க முடியாது, வீட்டு வாடகை, சாப்பாட்டுக்கு நான் நடித்துதான் ஆகவேண்டும் என்பதால், உடல்நிலைமையை பொருட்படுத்தாமல் வாய்ப்பை தேடி அலைந்து வருகிறேன்
ஆனால்,நடிக்க சான்ஸ் கேட்டு செல்லும் இடத்தில் என்னை கேவலமாக பேசுகிறார்கள். தலைமுடி இல்லாமல், ஒரு பக்க மார்பகம் இல்லாமல் எப்படி நடிப்பீர்கள் என்று கேட்டு என்னை மேலும் காயப்படுத்துகிறார்கள். எத்தனையோ படங்களில் குணசித்திர வேடத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால், நடிகர் சங்கத்தில் இருந்து எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
விஷாலிடம் நேரடியாகவே உதவி கேட்டேன் அவர் நடிகர் சங்கத்தில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார். நடிகர் சங்கத்தில் தான் பணம் இல்லை, அவரிடமும் பணம் இல்லையா? சின்னத்திரை சங்கத்தினர் அவர்களால் முடிந்த சிறிய தொகை கொடுத்து உதவினார்கள். என் வயிற்றுப்பிழைப்பிற்காக நான் நடித்துத்தான் ஆக வேண்டும் நடிப்பை தவிர வேறு தொழில் எனக்கு தெரியாது என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!