• Nov 19 2024

தோழியின் கணவரைத் திருமணம் செய்யும் ஹன்சிகா... அப்போ இது இரண்டாம் திருமணமா... தீயாய் பரவும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. ஒரு காலத்தில் இவருக்கு பட வாய்ப்புக்கள் வந்து குவிந்திருந்தாலும் தற்போது அவை சற்றுக் குறையவடைய ஆரம்பித்து விட்டது. அதாவது சிம்புவோடு காதல், பின் பிரேக் அப் என ஹன்சிகாவின் பெர்சனல் லைப் போலவே அவரின் சினிமா வாழ்க்கையும் பாதிக்க ஆரம்பித்தது. 


இதனைத் தொடர்ந்து இவர் குடும்ப வாழ்க்கையில் இணையத் திடடமிட்டுள்ளார். இந்நிலையில் இவரிற்கு அடுத்த மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற உள்ளது.

அதாவது இவர் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். மேலும் இவர்கள் இருவரினதும் திருமணம் ஆனது ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 


இவ்வாறாக ஹன்சிகாவின் திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க மறுபுறம் மாப்பிள்ளை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் இவர் குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

அதாவது ஹன்சிகா திருமணம் செய்யவுள்ள சோஹைல் ஹன்சிகாவின் தோழியின் கணவராம். அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. எனவே இதன் மூலமாக ஹன்சிகாவை சோஹைல் இரண்டாம் திருமணம் தான் செய்கிறார் என்பதை ஊகிக்க முடிவதாக இணையத்தில் பல ரசிகர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement