இந்தியாவின் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியிக்கின்றது. இதனால் மக்கள் எல்லோரும் பல இடர்களை சந்தித்து வருகின்றனர். குடியிருப்புக்குள் மழை புகுந்து விட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும் தேங்கிய நீரை அகற்றுவதற்கான வழிமுறைகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விட்டதால் மக்கள் இருட்டுக்குள் இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகனாக இல்லாமல் பொதுமக்களாக கேட்கின்றேன் 'மழை நீர் வடிகால் என ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு முடிசீங்களே. அது சென்னைக்கு தானா இல்லை சிங்கப்பூருக்கு செஞ்சீங்களா' என கேட்டிருக்கிறார்.
'நான் அண்ணா நகரில் தங்கி கொண்டிருக்கிறேன், இங்கேயே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கிறது. மற்ற இடங்களில் நிலைமை எப்படி இருக்கும்.' 2015,ல் வெள்ளம் வந்த போது மக்கள் எல்லோருக்கும் உதவினோம், ஆனால் தற்போது 8 வருடங்கள் கழித்து அதை விட மோசமான நிலை தான் வந்திருக்கிறது.
இதை நினைக்கும் போது ரொம்ப கேவலமாக இருக்கு, எங்க வீட்டில கூட வயது போனவங்க இருக்கிறாங்க, நிறைய வீடுகளில் சின்ன குழந்தைகள் இருக்கிறாங்க இதற்கு மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு உதவ வேண்டும். என விஷால் கேட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!