இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில்,வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ள திரைப்படம் தான் துணிவு. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது.
தளபதி விஜய்யின் 'வாரிசு' படமும் பொங்கல் பண்டிகையை குறிவைத்துள்ளதால், தீவிர புரோமோஷன் பணிகளிலும் 'துணிவு' படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், அண்மையில் கூட அஜித்தின் துணிவு திரைப்படம், துபாயில் ஸ்கை டைவிங் மூலம் பிரமோட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் ரசிகர்கள் அடுத்து 'துணிவு' படம் குறித்து என்ன தகவலை வெளியாகும் என காத்திருந்த, நிலையில் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.இதுவரை துணிவு படத்தில் இருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், நாளை மிக பெரிய தகவல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சிபி சக்கரவர்த்தி. பாவனி, அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது படக்குழு வெளியிட்டுள்ள இந்த தகவல் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது எனலாம்.
We are as excited as you are! 🤩💥#Thunivu 😎 #ThunivuPongal 💥 #NoGutsNoGlory 💪🏻✨ #ThunivuWithLycaProductions 🤗#AjithKumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @zeestudiossouth @BayViewProjOffl @mynameisraahul #RomeoPictures @LycaProductions @gkmtamilkumaran @Tentkotta https://t.co/ZCChBzRdFC
Listen News!