விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் Dedication Round இடம்பெறுகின்றது. அதில் மைத்ரேன் என்ற சிறுவன் தனது தாய்க்காக பாடல் பாடுகின்றான். அதுமட்டுமல்லாது தனது தாய்க்காக சேலை ஒன்றையும் சர்ப்பிரைஸ் ஆக கொடுத்துள்ளார்.
அத்தோடு சந்திரமுகி-2 படக்குழுவினரும் படத்தினுடைய ப்ரோமோஷனுக்காக சூப்பர் சிங்கர் ஷோவிற்கு வருகை தந்துள்ளனர். அதில் இயக்குநர் பி.வாசுவிடம் உங்க படக் ஹீரோயன்ஸுடன் டான்ஸ் ஆட வேண்டும் என மைத்ரேன் கேட்கின்றார்.
இதனையடுத்து நடிகை சிருஷ்டி டாங்கே மேடை ஏறி மைத்ரேனுடன் டான்ஸ் ஆடுகின்றார். இதோ அந்த சூப்பரான ப்ரோமோ வீடியோ..!
Listen News!