தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார், பயணம் செய்வதில் அலாதி பிரியம் உள்ளவர். அஜித் குமார் தனது இருசக்கர வாகனத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளார்.மிக கடினமான கால நிலைகளில் கூட அஜித் பயணம் செய்துள்ளார்.குறிப்பாக நேபாளத்தில் அஜித் குமாரின் பயணம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
கடுமையான நிலப்பரப்பு உடைய அந்த மாநிலத்தில் அஜித் பயணம் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் அஜித் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.இது ஒரு புறம் இருக்க ரசிகர்களை மகிழ்விக்க திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். அதன்படி இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்றும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆரம்பமாகலாம் என ரசிகர்களால் நம்பப்படுகின்றது.
விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் தாமதமாகுவதால் அஜித் பல்வேறு இடங்களுக்குச் சென்று வரும் புகைப்படங்களும் வெளியாகி வருவதுண்டு. அந்த வகையில் தற்பொழுது அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!