• Sep 20 2024

பாரதி கண்ணம்மாவுக்கு டாட்டா சொன்னதும் வேறு சீரியலில் என்ட்ரி கொடுக்கும் அருண் - குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் எப்போது முடிவடையும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாகக் காத்திருந்தனர்.அதன் படி இந்த சீரியல் மிகவும் வித்தியாசமான முறையில் கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்து விட்டது.

இதனை அடுத்து இந்த சீரியலில் இரண்டாம் பாகம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது.இதில் கதாநாயகியாக வினுஜா தேவி தான் நடிக்கின்றார். கதாநாயகனாக சிப்பு சூரியன் நடிக்கின்றார். இந்த சீரியல் வித்தியாசமான ஜானரில் ஒளிபரப்பப்படவுள்ளதால் கண்டிப்பாக ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று நம்பப்படுகின்றது.


மேலும் முதல் சீசனில் பாரதியாக நடித்த அருண் பிரசாத் இனிமேல் எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்பட்டது. அதன்படி இவர் தற்போது ஈரமான ரோஜா சீசன் 2 சீரியலில் நடிக்க வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.


ஈரமான ரோஜாவே சீசன் 2 நடிகர் நடிகைகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் விரைவில் அவரை இந்த சீரியலில் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement