ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. மௌன ராகத்தின் அப்டேட் வெர்ஷன் என அந்தப் படம் விமர்சிக்கப்பட்டாலும் படம் மெகா ஹிட்டானது. முதல் படத்தையே மெகா ஹிட்டாக கொடுத்துவிட்டால் அந்த இயக்குநரின் கிராஃப் உச்சம் சென்று விடும் என்ற கோடம்பாகத்தின் விதியின்படி அட்லீயின் கிராஃப்பும் ராஜா ராணி படத்துக்கு பிக்கப் ஆனது.
ராஜா ராணி ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். மெர்சல், பிகில் படங்களில் இணைந்தார் அட்லீ. இதில் மெர்சல் மெகா ஹிட்டாக பிகில் தோல்வி படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து வெகு சில படங்களிலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா வரிசையில் நேரடி ஹிந்தி படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார் அட்லீ.
ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிவரும் ஜவான் நிச்சயம் அட்லீயின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வந்தது. எனவெ படம் ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் முடிய தாமதமானதால் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இதற்கிடையே படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லாம் எப்போது வரும் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ஷாருக்கானின் ரசிகர்கள். ஆனால் அதுகுறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் ஷாருக்கான் ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ஜவான் படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், "அது எல்லாமே தயாராக இருக்கிறது மற்ற விஷயங்கள் அதற்கான இடங்களில் இருக்கின்றன. கவலை வேண்டாம் எல்லாமே நல்ல இடத்தில்தான் இருக்கின்றன" என குறிப்பிட்டிருந்தார்.எனவே டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!