• Sep 20 2024

துணிவு படத்தின் ட்ரைலர் எப்போது தெரியுமா..? ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் அடுத்த ஆண்டு 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் துணிவு. இப்படத்தினை எச்.வினோத் இயக்கவுள்ளதோடு பிரபல பாலிவூட் தயாரிப்பாளரான போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் நடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். அதே போல வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.


ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் , பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு படத்தின் ட்ரைலர் வருகிற 2023ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement