பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.அடிக்கடி ஹவுஸ்மேட்ஸ் தமக்குள் மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர்.
சில போட்டியாளர்கள் மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை கூட யோசிக்காமல் ஒருவருக்கொருவர் முட்டி மோதி கொண்டு விளையாடி வருவதையும் பார்க்க முடிகிறது. அதே நேரம் சில போட்டியாளர்கள், சற்று அமைதியாக சேஃப் கேம் விளையாடியும் வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேசன் பட்டியலில், கதிரவன், ரக்ஷிதா, ஜனனி, மைனா தனலட்சுமி மற்றும் குயின்ஷி ஆகிய 6 போட்டியாளர்களின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் குயின்ஷி வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கமல்ஹாசன் அசீமிடம் எதுவும் மாற்றம் இல்லாததால் அவரது பிழையை சுட்டிக் காட்டுகின்றார். அத்தோடு ரெட் காட் கொடுத்தால் அசீமுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் என்றும் கூறுகின்றார்.
Listen News!