தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் மாஸ்டர் மகேந்திரன் நாட்டாமை , நீ வருவாயென ,மின்சாராக் கண்ணா, நட்புக்காக ,காதலே காதலே உட்பட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து விழா என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு இன்னும் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றி பெற்று கொடுத்த படம் தான் மாஸ்டர்.
இப்படத்தில் விஜய்சேதுபதியின் இளமைக் கால பருவத்தில் நடித்திருந்தார். குட்டி பவானியாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார்.
இதனைத் தொடர்ந்து அர்த்தம் என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் தளபதி 67 படத்தில் நீங்க இருக்கின்றீர்களா எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய அவர் சத்தியமா இது எனக்குத் தெரியாது. லோகேஷ் அண்ணா கூப்பிட்டு சின்ன காரெக்டரை கொடுத்து நடிச்சு தாடா என்று சொன்னால் கூட நடிச்சுக் கொடுப்பேன். மற்றும் படி அதில் இருக்கிறனா இல்லையா என்று எனக்கே தெரியாது என்று கூறியிருக்கிறார்.
Listen News!