பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது வாரங்களைக் கடந்துள்ளது. 21 போட்டியாளர்கள் பங்குபற்றி வந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து 4 பேர் வெளியேறியுள்ளனர். இருந்தாலும் நிகழ்ச்சி பரபரப்பு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் இந்த வாரம் பேக்கரி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியாளர்கள் கண்ணா லட்டு திண்ண ஆசையா மற்றும் அட தேனடை என்கிற பெயரில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினர்கள்.
இதனால் பலருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. குறிப்பாக இந்த வாரம் நடந்த அனைத்து மோதல்களிலும் அமுதவாணன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் பெயர்கள் அதிகளவில் இருந்தன. அதே போல மணிவண்ணன் மற்றும் விக்ரமன் ஆகியோருடனும் அவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் ஜனனியை வேஸ்ட் பொஃபோமர் என்று விக்ரமன் கூறியதால் மற்றவர்கள் ஆகியூமன்ட் செய்தனர். இதனால் கடுப்பான ஜனனி ஆகியூமன்ட் பண்ணாதீங்க என்று சொல்லி கத்தி அழுதார். இதனை தற்பொழுது அம்மா என்னை விட்டுட்டு போய்ட்டீயேம்மா என சிறுபிள்ளை அழுவது போல ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!