• Sep 21 2024

800 கோடி எங்கே.. 187 கோடி எங்கே..இதை பண்ணிட்டு சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படுங்க- விஜய்யை மோசமாக விமர்சித்த பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சரத்குமார் பேசும் போது விஜய் தான் இன்றைய சூப்பர் ஸ்டார் என்று பேசியிருந்தார். இது ரஜினி ரசிகர்களை மிகவும் கோபத்துக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் ரமணா படத்தில் போலீஸ் ஆக நடிக்க ஆரம்பித்து ஏகப்பட்ட படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த மீசை ராஜேந்திரன் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்து வருகின்றார்.இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" அதற்கு விஜய் ஆசைப்படலாமா? என்று கேட்டுள்ளார்.


மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம், விக்ரம் படங்கள் எல்லாம் கூட கடந்த ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தாலும், ரஜினிகாந்தின் 2.0 படைத்த 800 கோடி இண்டஸ்ட்ரி ஹிட்டை சாதிக்கவில்லை. அப்படியொரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து விட்டு பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுங்க விஜய் என பேசி உள்ளார்.


மேலும்  தமிழ்நாட்டை தாண்டி பல பாலிவுட் பிரபலங்களே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான் என பல பேட்டிகளில் கூறியுள்ளனர். நடிகர் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் ரஜினிகாந்த்தின் நடிப்பு மற்றும் ஸ்டைலை பின்பற்றி பல படங்களில் நடித்துள்ளனர் என பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement