• Nov 10 2024

எங்க போனாலும் கில்லி அம்மா என்று தான் சொல்லுவாங்க- மனம் நெகிழ்ந்து பேசிய நடிகை ஜானகி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் கெரியரில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது தான் கில்லி.இப்படம் வசூலில் அள்ளிக் குவித்ததோடு மட்டுமல்லாமல் இப்போது வரை ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் படமாகவே உள்ளது. இப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு சீனும் எப்பொழுதும் மறக்க முடியாது.

இப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தவர் தான் ஜானகி. இதில் இவருடைய  நடிப்பு குழந்தைத் தனமாகவே இருக்கும் .இந்த நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது 


நான் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கில்லி அம்மா என்று கூப்பிடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த படத்தில நடிச்சதுக்கு பிறகு எங்க போனாலும்  படத்தில வருகிற ஏதாவது ஒரு சீன் பற்றி கேட்டிட்டு தான் இருப்பாங்க.நான் அம்மா காரெக்டரில் தான் நடிக்கவே ஆரம்பிச்சேன்.


எனக்கு சாறி கட்டுவது என்றால் ரொம்ப பிடிக்கும். சாறி தான் எப்போதும் பாதுகாப்பாகவும் எமக்கு இருக்கும். கில்லி படத்தில கூட விதம் விதமான சாறி கட்டியிருப்பேன் என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement