நடிகர் எஸ்ரா மில்லர் நடிப்பில் ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு படம் தான் 'தி ஃப்ளாஷ'. இப்படமானது அடுத்தடுத்து நேர்ந்த பல சிக்கல் காரணமாக பின்தள்ளிப் போனாலும் தற்போது ஒரு வழியாக வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.
கதைக்கரு
அந்தவகையில் இப்படத்தினுடைய கதைக்களம் குறித்துப் பார்ப்போம். கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிவந்த ஜஸ்டிஷ் லீக் படம் எங்கு முடிந்ததோ அங்கிருந்தே தி ஃபிளாஷ் திரைப்படம் தொடங்குகின்றது.
அதாவது தனது தாயை தாயின் இறப்புத் தொடர்பில் கைதாகியுள்ள தனது தந்தையை காப்பாற்ற உள்ள கடைசி வாய்ப்பை பயன்படுத்தி, அவரை விடுதலை செய்ய நாயகன் பாரி ஆலன் கடுமையாக போராடி வருகிறார். கடைசியில் வேறு வழி எதுவும் இல்லாமல் இறுதியாக தனது சக்தியை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து, கடந்த காலத்திற்கு சென்று தனது தாய் இறப்பதை தடுத்து நிறுத்துகின்றார்.
இதனையடுத்து அங்கிருந்து நிகழ்காலத்திற்கு செல்லும்போது பாதியிலேயே அவர் மாட்டிக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு தனது இளம் வயது பாரி ஆலன் வெர்ஷனை மீட் பண்ணுகின்றார். அதோடு, அவர் செய்த இத்தகைய மாற்றத்தால் உலகம் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறது. அதில் இருந்து உலகத்தை காப்பாற்ற அவர் பின்பு என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறார்.
இறுதியில் தனது தனது பெற்றோரை காப்பாற்றினாரா, மீண்டும் நிகழ்காலத்திற்கு பாரி ஆலன் திரும்பினாரா என்பது தான் இப்படத்தினுடைய மீதிக்கதை.
பலம்
இந்தப் படமானது வழக்கமான டார்க் டோன் டிசி படமாக இல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்தோடு இதில் இரண்டு பேட்-மேன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டுமே கதைகளுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது பென் அஃப்ளெக் அட்டகாசமான அதிரடி காட்சிகளால் ரசிகர்களை திகைப்பூட்ட, பேட்மேன் எப்படி ஒரு கைதேர்ந்த டிடெக்டிவ் என்பதை விளக்கும் விதமாக மைக்கேல் கீட்டன் செயல்பட்டுள்ளார்.
மேலும் நடிகர் எஸ்ரா மில்லரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், படத்தில் பாரி ஆலன் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே நடித்து கொடுத்துள்ளார்.
சூப்பர் கேர்ள் கதாபாத்திரம் தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள பல நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்கடிக்கச் செய்கிறது. அதுமட்டுமல்லாது கிளைமேக்ஸ் காட்சியில் மல்டிவெர்ஸ் என்பதை மார்வெல் படங்களை காட்டிலும் சிறப்பாக காட்டியுள்ளது டிசி.
பலவீனம்
இப்படத்தின் உடைய மையக்கரு என்பது பாரி ஆலனுக்கும், அவரது தாய்க்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான். ஆனால், அது ரசிகர்கள் இடையே பெரிய அளவில் சென்று சேரவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அதேபோல் கேப்டன் ஜாட் வில்லனாக கதைக்கு பெரும் வில்லனாக பயன்படவில்லை. இருப்பினும் கதையின் நகர்வில் முக்கிய பங்கு வகிக்கிறார் எனக் கூறலாம்.
அத்தோடு ஆங்காங்கே கிராபிக்ஸ் காட்சிகளில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன.
மேலும் பின்னணி இசை பெரியளவில் ஈர்க்கவில்லை.
தொகுப்பு
மார்வெல் நிறுவனம் அடுத்தடுத்து சுமாரான படங்களை கொடுத்து வரும் நிலையில், டிசி நிறுவனம் தற்போது ஒரு தரமான படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளது என்று கூறலாம்.
Listen News!