இந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அக்ஷய் குமார் தொடர் தோல்வியை தழுவி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான 'ரக்ஷா பந்தன்', 'சாம்ராட் பிரித்விராஜ்' ஆகிய படங்கள் வசூலில் பின்தங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் 'ஓ.எம்.ஜி. 2' என்ற படம் திரைக்கு வந்துள்ளது. அதாவது பாலியல் கல்வியை போதிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் இந்து கடவுள்களுக்கு எதிரான சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் எதிர்ப்புகள் ஏற்கெனவே கிளம்பி இருந்தன.
இந்த நிலையில் வட மாநிலங்களில் ஓ.எம்.ஜி. 2 படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு அங்கு போராட்டங்கள் நடத்தி உள்ளனர். அதாவது படத்தை திரையிட கூடாது எனக்கூறி கோஷங்கள் எழுப்பி அக்ஷய் குமாரின் உருவ கொடும்பாவியை எரித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.
அதுமட்டுமல்லாது தியேட்டர்களில் வைத்திருந்த ஓ.எம்.ஜி. 2 படத்தின் போஸ்டர் பேனர்களை கிழித்து தீயில் எரித்தும் உள்ளனர். இந்த விடயமானது தற்போது ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!