• Sep 20 2024

Bigg Boss Season -7இல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார் யார்? வெளியான தகவல் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் தண்ணீருக்கு நடுவே தடுப்பனையில் கமல்ஹாசன் காருடன் நிற்பது போல் வீடியோ வெளியாகி இருந்து அனைவரையும் மிரட்டி இருந்தது.

இப்போது ரசிகர்கள் அடுத்து எப்போது நிகழ்ச்சி தொடங்கப்போகிறது என்று கேள்விகள் கேட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை சரியாக நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாக போகிறது என்ற விவரம் வரவில்லை.

செப்டம்பர் கடைசியில் அல்லது அக்டோபர் 2ம் வாரத்தில் தொடங்கப்படலாம் என்கின்றனர்.பிக்பாஸ் புரொமோ வந்ததில் இருந்து நாளுக்கு நாள் போட்டியாளர்கள் குறித்து தான் நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி இப்போது சிலரது பெயர் அடிபடுகிறது.


ரேகா நாயர், ப்ருத்விராஜ் (பப்லு), தொகுப்பாளர் ரக்ஷன் இவர்கள் 3 பேரின் பெயர்கள் அதிகம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement