• Sep 20 2024

உங்களை யார் கட்டாயப்படுத்தினார்கள்- மாறி மாறிப் பேசி சர்ச்சையில் சிக்கிய கரீனா கபூர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கரீனா கபூர். இவரது நடிப்பில் உருவாகியிருந்த  லால் சிங் சத்தா படம் நேற்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாளில் வெறும் 12 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பேச்சு சில வாரங்களாகவே இருந்து வந்தது.

 Boycott Laal Singh Chaddha என டுவிட்டரில் இப்படம் குறித்து ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருந்ததால் கோபமடைந்த கரீனா'உங்களை யார் கட்டாயப்படுத்தினார்கள்' என பேசி இருந்தார்.


அத்தோடு தற்போது படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்போது கரீனா கபூர் அப்படியே தலைகீழாக பேசி இருக்கிறார். 'படத்தை புறக்கணிக்காதீர்கள். 2.5 வருடமாக இந்த படத்திற்கு 250 பேர் உழைத்து இருக்கிறார்கள்' என கூறி இருக்கிறார்.இந்த இரண்டு வீடியோக்களையும் பதிவிட்டு நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement