இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது
மேலும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வருகின்றது
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயை இயக்கப் போகிறார் என்ற தகவல் சமீபத்தில் உலாவி வந்தது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லோகேஷ், விஜய் 67வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்றும், படம் மாஸாகவும் கிளாஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாஸ்டர் படத்தைத் தயாரித்த லலித் குமார் தான் இந்தப் படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!