தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருபவர் வடிவேலு. நீண்ட இடை வெளியின் பின்னர் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய திரைப்படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்தத் திரைப்படம் கடந்த டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து இருந்தது
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் வடிவேலு ரசிகர்கள் சற்று அப்செட் ஆகினார்கள்.இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாதது ஏன் என்பதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார் .
அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் அப்படத்திற்கு யூடியூப்பில் வந்த நெகடிவ் விமர்சனங்கள் தான் என்று தெரிவித்துள்ளார். திறந்த வெளி கக்கூஸ் மாதிரி யார் யாரோ யூடியூப் சேனல் ஆரம்பித்து அசிங்க அசிங்கமா பேசுவதாகவும், இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனங்களை பரப்பிவிட்டு தோல்வியடைய செய்துவிட்டதாக வடிவேலு சொல்லி உள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இதனை அடுத்து வடிவேலு மாமன்னன் சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பதும குறிப்பிடத்தக்கது.
Listen News!