• Sep 20 2024

சூப்பர் ஸ்டாரின் கையில் இருக்கும் அந்தக் குழந்தை யாரு..? இப்போது என்ன பண்ணுகிறார்?.. வைரலாகும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்…" என்ற பாடலிற்கு ஏற்ப சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாவராலும் அறியப்பெற்ற ஒரு சினிமாப் பிரபலமே நடிகர் ரஜினிகாந்த். அதுமட்டுமன்றி இவரது ஸ்டைலுக்கும், நடிப்பிற்கும் என்றே இவருக்கு இந்திய ரசிகர்களைக் கடந்து உலகம் பூராகவும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. அதுமட்டுமல்லாது 'கலைமாமணி', 'பத்ம பூஷன்', 'பத்ம விபூஷணன்' எனப் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

பிரபல இயக்குநரான கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் அமைந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட 175 இற்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். இதில் 'காளி', 'அன்புக்கு அடிமை', 'பில்லா', 'முள்ளும் மலரும்', 'வள்ளி', 'பாபா' உள்ளிட்ட படங்கள் இன்றும் மறக்க முடியாத அளவிற்கு நம் மனதில் இடம்பிடித்து நிற்கின்றன.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின் பழைய காலத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ரஜினிகாந்த் கையில் ஒரு பெண் குழந்தையை தூக்கி வைத்திருக்கின்றார். அந்தக் குழந்தை யாராக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பலமாக எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை பிரபல பிண்ணனிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் தான் எனத் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் மியூசிக்கில் இளங்கலை, முதுகலை கல்வியினை கற்றிருக்கின்றார். காலேஜிலும் இவர் கோல்ட் மெடல் வாங்கி பலரினதும் பாராட்டுக்களை பெற்றிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது இவரது 12-ஆவது வயது இருக்கும் போது 'காளி' என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். அப்போது ரஜினிகாந்த் தனது கையில் தூக்கி வைத்திருக்கும் அனுராதா ஸ்ரீராமின் புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 3000க்கும் அதிகமான பாடல்கள் பாடி இசையுலகையே தன்னுடைய குரலினால் வசீகரம் செய்து வைத்திருக்கும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராமின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் அது!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement