நடிக்க வாய்ப்பு வந்தா ,வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள் சில ஹீரோயின்கள். அவர்களின் நோக்கம், தங்கள் அழகை வித்தியாசமான கோணங்களில் போட்டோவாக்குவது, அதற்கு வரும் ரசிகர்களின் ஏடா கூட கருத்து வந்தாலும், இதற்காகவே ஸ்பெஷல் போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ரம்யா பாண்டியன் ப்ளேபாய் இதழ் போட்டோகிராஃபரை வைத்து வித்தியாசமான முறையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மாடல்களை க்ளாமராக போட்டோஷூட் செய்வதில் பெயர் பெற்ற பிளேபாய் போட்டோகிராபர் எல்.ராமச்சந்திரன் என்பவர் ரம்யா பாண்டியனை வித்தியாசமான முறையில் போட்டோஷூட் எடுத்துள்ளார்.
இதுவரை க்ளாமர் மற்றும் ரிச்சான சிட்டி லுக்கில் மட்டுமே போட்டோஷூட் வெளியிட்டு வந்த ரம்யா பாண்யன் தற்போது வித்தியாசமான முறையில், கிராமத்து பெண் கேட்டப்புக்கு மாறியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.அத்துடன் ரசிகர்கள் பார்த்து லைக்ஸுகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
Listen News!