தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த பல காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் 80களில் முக்கிய காமெடியனாக வலம் வந்தவர் தான் நடிகர் குமரிமுத்து. இவர் உதிரிபூக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இதனைத் தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் என தொடங்கி அஜித், விஜய் என பலரது படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அவர் இறுதியாக 2009ம் ஆண்டு வெளிவந்த விஜய்யின் வில்லு படத்தில் நடித்தார்.
தனது தனி சிரிப்பு மூலம் மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்த அவர் தனது 75வது வயதில் பிப்ரவரி 29ம் தேதி உயிரிழந்தார். குமரிமுத்துவின் உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அந்த கல்லறையில் Its Time For The God, To Enjoy His Laughter என்று வசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நடிகர் குமரிமுத்துவின் மகள் எலிசபெத் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அட நம்மை சிரிப்பின் மூலம் மகிழ நடிகரின் மகளா இவர் என ரசிகர்கள் அவரது வருங்காலத்திற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- விடுதலை திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- இரண்டு பாகமாக வெளியாகவுள்ளதாம்
- ‘கடைசியில் அவர் பூனை மற்றும் நாயுடன் தான் சாகப் போகின்றார்’- சமந்தா குறித்து டுவிட் போட்ட நபர்
- நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க முடிவு செய்த ரூசோ பிரதர்ஸ்-அட சூப்பர் தகவலாச்சே
- ஹைதராபாத்திற்கு தனி விமானத்தில் சென்ற நடிகர் அஜித்- AK61 லேட்டஸ்ட் அப்டேட்!
- ‘ஒரு முடிவோட தான் இது எல்லாம் பண்ணுறீங்க போல’-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விமர்சித்து வரும் ரசிகர்கள்
- மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களில் நடக்கும் விக்ரம் படத்தின் ப்ரமோஷன்
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!