தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.
இவருடைய நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது.மேலும் இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், காட் ஃபாதர் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் தெலுங்கில் ஜெயம் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட் ஃபாதர் படத்தில் கதாநாயகியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.
இவ்வாறுஇருக்கையில் கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான படம் லவ் ஆக்சன் டிராமா. நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த இந்த படத்தை இளம் நடிகர் தயன் சீனிவாசன் என்பவர் இயக்கியிருந்தார்.
மேலும் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன். இளம் இயக்குநர் வினித் சீனிவாசன் தம்பி என்பதை பலர் அறிந்திருக்கலாம்.. முதல் படத்திலேயே நயன்தாராவை வைத்து இயக்கிய தயன் சீனிவாசன் தற்போது படங்களில் நடித்துக் கொண்டே அடுத்த படத்தை இயக்குவதற்காக கதையை தயார் செய்து வருகிறாராம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறும்போது மீண்டும் நயன்தாராவை தனது படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு ஏற்ற வகையில் கதையை தயார் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவை பொறுத்தவரை எப்போதுமே தன்னை ஒரு சகோதரராகவே கருதுபவர் என்பதால் அவரை மீண்டும் அணுகி தனது படத்தில் நடிக்குமாறு கேட்பதற்கு தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார் தயன் சீனிவாசன்.
- பிறசெய்திகள்:
- அடுத்தடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி சுரேஷ்
- விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் நடிக்கும் விக்ரம்…யார் இயக்கம் தெரியுமா..!
- விக்ரம் ஆடியோ லாஞ்சில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்
- முதல்முறையாக கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா பட்
- உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூலித்த RRR திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா..?
- டான் படம் இரண்டாவது நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..? வெளியானது முழு விபரம்..!
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!