• Sep 20 2024

சூப்பர் சிங்கர் சீசன் 9இன் முதல் பைனலிஸ்ட் யார்...? வெளியானது ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் சாதாரண மக்களின் திறமைகளை நிரூபிக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பலர் தங்களுடைய திறமையின் காரணமாக பிரபலங்கள் ஆகின்றனர்.


இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது இதன் 9ஆவது சீசன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வானது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதோடு தற்போது இறுதிப் போட்டியாளர்களுக்கான தேர்வு இடம்பெறுகின்றது. இதில் விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.


அந்தவகையில் இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் பிரிய ஜெர்ஷன், அபிஜித், பூஜா, ப்ரசன்னன், அருணா ஆகிய போட்டியாளர்களிற்கிடையே மாபெரும் இசை யுத்தம் இடம்பெறுகின்றது. 


இதனையடுத்து இந்த சீசனினுடைய முதல் பைனலிஸ்ட் யார் என்பதனை பாடகி அனுராதா ஸ்ரீராம் அறிவிக்கின்றார். இவ்வாறாக இந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்திருந்திருக்கின்றது. ரசிகர்களின் கருத்துப் படி பூஜா அல்லது அபிஜித் தான் வருவார் எனக் கூறுகின்றனர்.

எது எவ்வாறாயினும் யார் அந்த அதிர்ஷ்டஷாலி என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement