தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை மீனா. தனது அழகிய கண்களாலும், நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக 90S பலரின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை மீனா .
இவர் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் கலக்கி வந்தார்.
இவ்வாறு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து நடித்து வந்த நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 12 வித்யாசாகருக்கும் மீனாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் நடைபெற்றது.
இவ்வாறு சந்தோஷமாக வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளார்.
இந்நிலையில் உச்சம் பெற்ற நடிகை மீனாவின் கணவர் நேற்று திடீர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு இருக்கையில் நடிகை ரம்பா மற்றும் இயக்குநர் சேரன், கலாமாஸ்டர் என பலரும் தமது இரங்கல்களை நேரில் சென்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீனாவின் கணவர் பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது மீனாவின் கணவர் வித்யாசாகர் ஆந்திராவில் பிறந்தவர் ஆவார்.
அத்தோடு ஆந்திராவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இதன் பின் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்த நிலையிலேயே நடிகை மீனாவை திருமணம் செய்தார்.இதன் பிறகு தான் இவர் பிரபலமானாராம் என குறிப்பிடப்படுகின்றது.
பிற செய்திகள்
- நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்காரில் இருந்த அழைப்பு!
- ‘அந்த’ இடத்தில் வளையம் போட வாக்கெடுப்பு நடத்திய பிக்பாஸ் அபிராமி…குமுறும் ரசிகர்கள்..!
- மீனாவின் கணவனின் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் காரணங்கள்… கதறிய மகள்..!
- காலண்டரில் குறித்து வைத்து சூர்யா செய்யும் செயல் – ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா
- நிஜ வாழ்க்கையில் காரில் கடத்தப்பட்ட நமீதா… போலீசாரிடம் சிக்கிய நபர்; நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!