• Sep 20 2024

யாரு இந்த பொண்ணுங்க...அஜித் ஏன் இவ்வளவு அடக்கமாக நிற்கிறார்-டிரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோ..

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் வலிமை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் இயக்கும் ஏ.கே 61 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட மவுண்ட் ரோடு போன்ற செட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக இப்படத்தின் ஷுட்டிங் நடந்தது.

அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக ஏகே 61 டீம் புனே செல்ல உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அஜித், திடீரென கிளம்பி ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்று விட்டார். அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அஜித் பைக்கில் சுற்றுவது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பது, ரசிகர் டி ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் போடுவது, ஷாப்பிங் போவது என அஜித்தின் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில் தற்பொழுது வெளியாகிய போட்டோ ஒன்றில் அஜித்துடன் இரண்டு பெண்கள் நிற்கின்றனர்.இதனால் யாரு இந்த பொண்ணுங்க…அஜித் ஏன் இவ்வளவு அடக்கமாக நிற்கிறார் என ரசிகர்கள் குழப்பமடைந்து கேள்விகளை கேட்டு வந்தனர்.

அதாவது அஜித் லண்டனில் தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது எதிரே வந்த பெண் அஜித்தை அடையாளம் கண்டுபிடித்து, அவருடன் கை குலுக்குகிறார். அஜித்தும் மரியாதையாக கை குலுக்கி விட்டு, அந்த பெண்ணை உள்ளே செல்ல அடக்கமாக கையை காட்டி உள்ளார். அஜித் உடன் நடந்து வரும் பெண் அவரின் உதவியாளர் என சொல்லப்படுகிறது.

இந்த போட்டோ தான் அஜித் ரசிகர்கள் தற்போது டிரெண்டாகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement