• Sep 20 2024

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா யார்..?வெளிவந்த போஸ்டர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கக் கூடியவரும் பல ஹிட் படங்களை இயக்கியவராகவும் வலம் வருபவர் தான் இயக்குநர் மணிரத்னம். இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தை பிரமாண்ட பொருட் செலவில் எடுத்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது தாய்லாந்து, மும்பை, ஹைதராபாத், பாண்டிச்சேரி என மாறி மாறி நடந்து வருகின்றது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி ,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தின் திரை வடிவம் தான் இப்படம். இதில் அடுத்தடுத்து நடிக்கும் நடிகர்களின கதாபாத்திர லுக் போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றது.

முதலில் கரிகால சோழன் - விக்ரம், வந்தியதேவனாக - கார்த்தி, நந்தியாக - ஐஸ்வர்யா ராய்யை தொடர்ந்து தற்போது குந்தவையாக - திரிஷாவின் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷாவை தொடர்ந்து ராஜராஜா சோழன் எனும் அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவியின் போஸ்டர் நாளை வெளியாகும் என தெரிகிறது.

மணி ரத்னம் இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement