• Nov 19 2024

நடிகை ஜான்வி கபூரின் புதிய காதலன் யார் தெரியுமா?- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் பிரபல தயாரிப்பாளரான போனிகபூரை திருமணம் செய்து இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் மாரடைப்பினால் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவருடைய மகளான ஜான்வி கபூர் பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

அத்தோடு ஜான்வி தடக் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தில் நடித்த இஷான் கட்டாரை தான் முதலில் காதலித்தார். பின்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரைப் பிரிந்து விட்டதோடு தற்பொழுது அர்ஹான் என்பவரைக் காதலித்து வருகின்றார்.

அண்மையில் இருவரும் ஒன்றாக பார்ட்டிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. அந்த பார்ட்டியில் அர்ஹானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement