• Nov 10 2024

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணமாம்-மணப்பெண் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து "சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன்" போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாகவே சினிமாவில் நடித்து வருபவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் நிறையவே வெளியாகின்றன. இதற்கு ஹரிஷ் கல்யாண் ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கும் போது அந்த சீசனில் அவருடன் சக போட்டியாளராக இருந்த ரைசாவுடன் காதல் ஏற்பட்டது என்று பல கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன.

இதனை தொடர்ந்து பிரியா பவானி ஷங்கருடன் "ஓமணப் பெண்ணே" என்ற படத்தில் இணைந்து நடித்ததை தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சென்று புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வந்தனர். இதனால் பிரியா பவானி சங்கர் ஏற்கெனவே ஒருவரைப் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அவரை பிரேக்கப் செய்து விட்டார் என்றும் தற்போது ஹரிஷ் கல்யாணைக் காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் பிரியா மீண்டும் தன் காதலருடன் இணைந்த புகைப்படத்தை வெளியிட்டே வருகின்றார்.

இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் என்று ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதுவும் அவர் தனது பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

எனவே நடிகர் ஹரிஷ் கல்யாண் காதலித்த பெண்களில் ஒருவரை தான் திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவர் பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement