ஜெயிலர் திரைப்படம் வெளியாக 10 நாட்களே இருக்கும் நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அதில் பேசிய ரஜினிகாந்த், அண்ணாத்த படத்திற்கு பிறகு எந்த கதையும் எனக்கு சரியாக அமையாவில்லை. அப்போது தான் நெல்சன் ஜெயிலர் படத்தின் ஒன் லைன் கதையை சொன்னாரு, கதை எனக்கு பிடித்து விட்டது.
பீஸ்ட் படம் வெளியானதும் 20 நாள் கழிச்சு ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால் பீஸ்ட் வெளியான பிறகு அதற்கு விமர்சனம் சரியாக இல்லை. உடனே எனக்கு சில விநியோகஸ்தர்கள் ஃபோன் பண்ணி, படத்தின் விமர்சனம் சுமாரா இருக்கு. நெல்சன் தான் பண்ணனுமா என கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்கள் என்றார்கள். எப்போதுமே டைரக்டர்கள் தோற்க மாட்டார்கள். அவர்கள் எழுதின சப்ஜெக்ட் தான் தோற்றுப்போகும் என்று நெல்சனை பாராட்டி பேசி இருந்தார்.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அவரின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், தெலுங்கு நடிகையாக நடிகை தமன்னா நடித்து இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கவில்லை என்றும், அவர் தெலுங்கு நடிகையாக நடித்திருப்பதால் காவாலா பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
Listen News!