• Sep 21 2024

வாரிசு திரைப்படம் பமிலி ராஃமா என்று யார் சொன்னது - புதிய அப்டேட்டைக் கொடுத்த சரத்குமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் இயக்குநரின் நடிகராக தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தன்னுடைய அயராத முயற்சியினால் தான் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

மேலும் இவரைப் பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி வெளியாகினாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது கெரியரில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படம் இவருடைய 69 படம் என்பதோடு இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சரத்குமார் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி வாரிசு திரைப்படம் பமிலி ராஃமா என்று யார் சொன்னது. இப்படத்தில் பமிலி ராஃமாவும் இருக்கும் ராஃமாவும் இருக்கும் என்டரெயின்மன்ட்டும் இருக்கும் பைட்டும் இருக்கும் பாட்டும் இருக்கும் எல்லாமே இருக்கும் என்று அவர் கூறியதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement