• Sep 20 2024

30 மொழிகளில் வெளியாகவுள்ள சுழல் வெப் தொடரின் ட்ரெய்லர் ரிலீஸ்-மெயின் காரக்டரில் இவரா நடித்துள்ளார்?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிராமத்துப் பின்னணியில் அமைந்த திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதாநாயகியாக விஜய் சேதுபதி, விக்ரம் ,அதர்வா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து சோலோ ஹீரோயினாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர வெப் சீரியல்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது சுழல் என்னும் வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரில் இவருடன் கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா படத்திற்கு சூப்பராக இசையமைத்த சாம் சிஎஸ் இசையில் புஷ்கர் காயத்ரி திரைக்கதையில் உருவான இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர்.

30 மொழிகளில் இந்த தொடர் வெளியாக உள்ளது. அந்த வகையில் இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement