மதுரையில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி சேங்கையரிசி தம்பதிக்கு ஆறாவது மகனாக பிறந்தவர் தான் சூரி. அவர் ஏழாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி கிடைத்த வேலைகள் எல்லாம் பணிபுரிந்து வந்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்ட போதும் குடும்ப வறுமை காரணமாக அதை மூட்டை கட்டி விட்டு அதே ஊரில் போஸ்டர் ஒட்டுவது, கட்டவுட் கட்டுவது, பெயிண்ட் அடிப்பது, சாக்கடை அள்ளுவது போன்ற வேலைகளை எல்லாம் செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பை தேடி சென்னைக்கு வந்த சூரிக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அங்கு பனியன் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சென்றுள்ளார். ஏழு வருஷம் அந்த வேலையை செய்து, அதன் பின்பு நண்பர் ஒருவரின் உதவியுடன் சென்னைக்கு வந்து ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகராக உருவெடுத்து, தற்போது விடுதலை திரைப்பட மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹீரோ என்ற அந்தஸ்த்து சூரிக்கு கிடைத்துள்ளது. தற்போது வெளியான கருடன் படம் கூட விமர்சன ரீதியில் மட்டும் இன்றி வசூல் ரீதியிலும் சக்க போடு போட்டு வருகின்றது.
கருடன் பல வெற்றிக்குப் பிறகு கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி. எஸ் வினோத் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் மலையாள படமான ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா, ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆனா பெல் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், நடிகர் சூரிக்கு மற்றுமொரு அங்கீகாரம் கிடைத்துள்ளதால், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் சூரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
Listen News!