• Sep 20 2024

கலக்கப் போவது யாரு சம்பியன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் செல்லப் போவது யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சமீபகாலமாக பல ரியாலிட்டி ஷோக்கள் முடிவுக்கு வருகின்றது. அந்த வகையில் அண்மையில் தான் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர், குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் முடிவுற்றுள்ளது. இதனைத் தொடர்ந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் இறுதி நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது.அதற்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் அழைக்கப்பட்டதோடு இன்னும் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்த புரோமோவும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதனால் இந்த வாரம் காமெடி கலை கட்டும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். அதன்படி இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அசார் மற்றும் ரி எஸ் கே ஆகியோரே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்படுகின்றது.

அதாவது இந்த இறுதி நிகழச்சியில் இவர்கள் இருவரும் கலைஞர் கருணாநிதி மற்றும் அவரது மகன் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின போன்று பேசி அசத்தியுள்ளனர். அதே போல இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் அப்துல்கலாம் போன்றும் பேசியுள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் இவர்களது நடிப்புத்திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதனால் இந்த சீசனில் இவர்கள் இருவரும் தான் டைட்டில் வின்னர் ஆவார்கள் என கருதப்படுகின்றது. இருப்பினும் இது குறித்த சரியான தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement