• Sep 21 2024

“ஏன் அல்போன்ஸ்.. ஏன்?சுத்தமாக பிடிக்கவில்லை” - நயன்தாராவின் கோல்ட் படத்தின் டுவிட்டர் விமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 கடந்த 2013-ம் ஆண்டு ரிலீசான நேரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அல்போன்ஸ் புத்திரன்.இதனை அடுத்து இவரது இயக்கத்தில் பிரேமம் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.பிரேமம் படத்துக்கு பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கோல்ட்

இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளதோடு நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இப்படம் ட்ரெய்லர், டீசர் என எந்தவித புரமோஷனும் இன்றி திரையரங்குகளில் இன்று ரிலீசாகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


அதன்படி கோல்டு படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “அல்போன்ஸ் புத்திரனின் தனித்துவமான படத்தொகுப்பு மற்றும் மேக்கிங் ஸ்டைலுக்காக கோல்டு படத்தை பார்க்கலாம். முதல் அரைமணி நேரம் நன்றாக சென்றுகொண்டிருந்த படம் போகப் போக சலிப்படையச் செய்கிறது. கைதட்டி சிரிக்கும் அளவுக்கு ஆங்காங்கே காமெடிகள் உள்ளன. ஆனால் பிரேமம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்காதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


மற்றொருவர் போட்டுள்ள பதிவில், “ஏன் அல்போன்ஸ்.. ஏன்? பிரேமம், நேரம் போன்ற படங்களை கொடுத்த நீங்கள் இதுபோன்று ஒரு படத்தை கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை. சுத்தமாக பிடிக்கவில்லை” என சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இன்னொரு டுவிட்டில், “கோல்டு திரைப்படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளது. சுமாரான கதை மற்றும் அதை எடுத்த விதமும் புதுமையாக இல்லாததால் படம் சொதப்பல்” என பதிவிட்டுள்ளார்.மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது கோல்டு திரைப்படம் பிரேமம் அளவுக்கு இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. 


Advertisement

Advertisement