தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார்.
தமிழில் மட்டுமல்லாது தற்பொழுது ஹிந்தியிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இவர் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் தான் மேரி கிறிஸ்மஸ்". ஸ்ரீராம் ராகவன் என்பவருடைய இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃப் மற்றும் ராதிகா ஆப்தே மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் வினய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் முழு வீச்சில் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். . அப்பொழுது விஜய் சேதுபதியிடம் "ஹிந்தி தெரியாது போடா" என்கின்ற வசனங்களை நாம் கூறுகிறோம் ஆனால் நீங்கள் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கின்றீர்களே இது நியாயமா? என்று கேள்விகள் கேட்ட பொழுது, கோபப்பட்ட விஜய் சேதுபதி இது போல பலரிடம் கேட்கின்றீர்கள், யாரும் இந்தியை படியுங்கள் என்று திணிக்கவில்லை.
இங்கே ஹிந்தி திணிப்பு தான் வேண்டாம் என்று கூறுகின்றனர், ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அப்புறம் இப்போ எதுக்கு இந்த கேள்வி? என்று சற்று கோபமாக பதில் கூறியுள்ளார்.
Listen News!