விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சிரிச்சாப் போச்சு என்னும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் புகழ். இவர் இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பெண் வேடம் அணிந்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வந்தார். இருப்பினும் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான் எனலாம்.
அதாவது குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது.இதில் பங்குபற்றிய அஸ்வின்,பவித்ரா, ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பாலா, பாபா பாஸ்கர், ரித்திகா என அனைவருக்கும் அவர்களுக்கென்ற தனித்த ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
புகழ் மற்றும் ஷிவாங்கி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். குறிப்பாக புகழ் நடிப்பில் வலிமை, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், எதற்கும் துணிந்தவன், யானை ஆகிய படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகின.
தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.மேலும் அண்மையில் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து சில நாட்களுக்கு முன் திருமணம் செய்தார். இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
அவ்வப்போது தனது மனைவியுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.அதேபோல் பரட்டை புகழ் என்ற பெயரில் யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் பதிவிட்டுள்ளார். "என்னடா நீங்க இப்படி பண்றீங்க?" என குமுறி புகழ் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!