• Nov 19 2024

ஏன் இவ்வளவு குப்பையாக இருக்கீங்க... சுத்தமாக இருங்க... போட்டியாளர்களுக்கு பாடம் புகட்டிய கமல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி 4ஆவது வாரத்திலேயே விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத ஒரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக மாறி இருக்கின்றது. அதிலும் குறிப்பாக கமலின் எபிசோடுகளுக்காக காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். 

அந்தவகையில் நேற்றைய தினமும் நீல நிற ஷர்ட்டும், அங்கங்கே ஒட்டுபோட்டு தைத்தபடி இருக்கும் பேண்ட்டுன் மாஸாக என்ட்ரி கொடுத்தார் கமல். வந்ததுமே இந்த வார கேப்டன் மணிகண்டன் எவ்வாறு செயல்பட்டார் என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.


அதுமட்டுமல்லாது வீட்டை நான் பார்க்கும் போது போட்டது போட்டபடி அங்கங்கே கிடக்கிறது. மெத்தை, கிச்சன் என எதுவுமே சுத்தமாக இல்லாமல் அலங்கோலமாக இருக்கின்றது. நாம் இருக்கும் இடத்தை நாம் ஒவ்வொருவரும் தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் அதையாருமே இங்கு செய்வது இல்லை என்றார்.

அத்தோடு சாப்பிட்டதும் தட்டை எடுத்து செல்ல வேண்டும் இது இன்று வரை கிராமத்தில் நடந்து வருகிறது. அதே போல அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இவாறான ஒரு செல்ப் சர்வீஸ் இருக்கிறது என்றார்.

சாப்பிட்டதும் அதில் இருக்கும் குப்பையை தனியாக எடுத்துப் போடுவது தான் நல்ல பழக்கம். என்னத்தான் இதற்காக என்று தனித்தனி டீம் இருந்தாலும், வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 


கமல் இவ்வாறு சுத்தம் பற்றிக் கூறியதைக் கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்து இருந்தனர். போட்டியாளர்கள் அமைதியாக இருக்கலாம் ஆனால் நம்ம நெட்டிசன்ஸ் பார்த்திட்டு அமைதியாக இருப்பாங்களா?. ஏன் இவ்வளவு குப்பையாக இருக்கீங்க? இதைக்கூடவா சொல்லித்தரவேண்டும் எனக் கிண்டலாக கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement